துடுப்பாட்ட செய்தி
ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் உரிமை: இலங்கை உரிமையாளர்கள் எவருமில்லை
[ சனிக்கிழமை, 30 யூன் 2012, 06:32.48 மு.ப GMT ]
எஸ்.எல்.பி.எல் என்று அழைக்கப்படும் ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் அணிகளுக்கான உரிமையாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதன்படி உரிமையாளர்களின் பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த எவருமில்லை என்று தெரிகிறது.

7 அணிகளான வயம்ப, கந்துரட்ட, றுகுண, ஊவா, பஸ்னாஹிர, உத்துர, நகெனஹிர ஆகிய அணிகளுக்கான ஏல உரிமையில் இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளன.

இதில் அதிகபட்சத் தொகையான 5.02 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மஹேல ஜெயவர்தனவை அடிப்படையாகக் கொண்ட வயம்ப அணி குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வணி இலங்கையின் உள்ளூர் டி20 தொடர்களில் தொடர்ந்தும் பிரகாசித்து வரும் அணி என்பது குறிப்பிடத்தக்கது. வயம்ப அணியை இந்தியாவைச் சேர்ந்த வாதவன் ஹோல்ட்டிங்க்ஸ் என்ற தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது.

அடுத்த அதிகபட்சத் தொகையான 4.98 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கந்துரட்ட அணி வாங்கப்பட்டுள்ளது. கந்துரட்ட அணியில் குமாரா சங்கக்காரா முக்கியமான வீரராகக் காணப்படுகிறார்.

தொடர்ந்து றுகுண அணி மற்றும் ஊவா அணி தலா 4.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும், பஸ்னாகிர அணி 4.33 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும், உத்துர அணி 3.4 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கும், நகெனஹிர அணி ஆகக்குறைந்த தொகையான 3.22 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பஸ்னாஹிர அணியை இந்தியாவின் ரசிகர்களின் அமைப்பு ஒன்றே குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்தியன் கிரிக்கெட் டண்டி லிமிற்றட் என்ற இந்த அமைப்பு இந்தியக் கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.

எஸ்.எல்.பி.எல் போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி தொடங்கவுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர்
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்த்
சுமித் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தியது தான் திருப்புமுனை: பிளமிங்
ஸ்பாட்பிக்சிங்கில் சென்னை அணிக்கு தொடர்பு?
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் பணிநீக்கம்
சாதிக்க வேண்டிய கட்டயாத்தில் ராஜஸ்தான்? பிளேஆப் சுற்றில் ஐதராபாத்துடன் இன்று மோதல்
பெல்ஜியம் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய சானியா மிர்சா
ஹஸ்சி, ரெய்னாவின் அதிரடியால் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது சென்னை: 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது மும்பை (வீடியோ இணைப்பு)
ஐ.பி.எல். தொடரிலிருந்து புனே அணி திடீர் விலகல்
ஐ.பி.எல் சூதாட்டம்: பிரபல நடிகர் தாரா சிங்கின் மகன் கைது
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மூன்று பேரின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:21.02 மு.ப ]
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்]
மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:09.04 மு.ப ]
சகோதரர் தயாரிக்கும் படத்தில் ஸ்ரீசாந்த் நாயகனாக நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:22.03 பி.ப ]
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி கைதான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. [மேலும்]
ட்விட்டரில் வம்பிழுத்து பிரச்சினையில் சிக்கிய வார்னர்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:40.35 மு.ப ]
ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடும் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ட்விட்டரில் 2 செய்தியாளர்களை திட்டி எழுதியதால் கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. [மேலும்]
ஸ்பாட்ஃபிக்ஸிங்கால் மனஉளைச்சலுக்கு ஆளான டிராவிட்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:23.16 மு.ப ]
ஸ்பாட்ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தனது அணி வீரர்கள் மூவர் கைதாகியுள்ளமை தொடர்பில் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாக ஐ.பி.எல் ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். [மேலும்]