| | | |
| |
| | | |
| |
| ஒலிம்பிக்ஸ் செய்தி |
| ஒலிம்பிக் தடகளம்: 200மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை |
| [ வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 11:23.52 மு.ப GMT ] |
லண்டன் ஒலிம்பிக் தடகளப் போட்டியில் மகளிர் 200 மீற்றர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை அலிசன் பெலிக்ஸ் தங்கம் வென்றார்.லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தடகளப் போட்டியில் மகளிருக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது.
இதில் அமெரிக்க வீராங்கனை அலிசன் பெலிக்ஸ் 21.88 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கத்தைத் தட்டிச் சென்றார். 2004 மற்றும் 2008 ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற பெலிக்ஸ் முதல்முறையாக தங்கம் வென்றுள்ளார்.
இந்த ஒலிம்பிக்கில் 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஜமைக்காவின் ஷெல்லி-ஆன் பிரேசர் 22.09 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொரு அமெரிக்க வீராங்கனையான கார்மெலிட்டா ஜெட்டர் 22.14 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
100 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றதைப் போலவே, 200 மீ. ஓட்டத்திலும் தங்கம் வெல்ல காத்திருந்த ஷெல்லியின் கனவை பெலிக்ஸ் தகர்த்தார்.
2004 ஏதென்ஸ் மற்றும் 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீ. ஓட்டங்களில் தங்கம் வென்றவரான ஜமைக்காவின் வெரோனிகா கேம்பெல் பிரௌன், இந்த முறை 22.38 விநாடிகளில் இலக்கை எட்டி 4வது இடத்தையே பிடித்தார்.
மேலும், முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து இரு முறை தங்கம் வென்ற அவர், இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பையே இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் பணிநீக்கம் |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:14.04 மு.ப ] |
கேரளாவில் மத்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் இரும்பணம் என்ற ஊரில் மார்க்கெட்டிங் டிவிசன் உதவி மேலாளராக இருந்து வந்தவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். [மேலும்] | | ஹஸ்சி, ரெய்னாவின் அதிரடியால் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது சென்னை: 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது மும்பை (வீடியோ இணைப்பு) |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:25.02 பி.ப ] [ ] |
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. [மேலும்] | | ஐ.பி.எல். தொடரிலிருந்து புனே அணி திடீர் விலகல் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:55.58 பி.ப ] |
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து புனே வாரியர்ஸ் அணி விலகுவதாக இன்று அறிவித்துள்ளது. [மேலும்] | | ஐ.பி.எல் சூதாட்டம்: பிரபல நடிகர் தாரா சிங்கின் மகன் கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 12:05.29 பி.ப ] |
ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் இன்று மும்பையில் கைது செய்யப்பட்டார். [மேலும்] | | இந்தியாவுடன் மோதினாலே ஸ்பெஷல் தான்: முகமது ஹபீஸ் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:30.28 மு.ப ] |
இந்திய அணியுடன் மோதும் போட்டி எப்போதுமே ஸ்பெஷலானது என்கிறார் பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் முகமது ஹபீஸ். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|