துடுப்பாட்ட செய்தி
டி20 உலகக்கிண்ண மற்றும் நியூசிலாந்துக்கெதிரான அணி அறிவிப்பு: இடம் பிடித்த யுவராஜ் மற்றும் லட்சுமண்
[ வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 12:47.13 பி.ப GMT ]
நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடர் மற்றும் டி20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 18ம் திகதி முதல் ஒக்டோபர் 7ம் திகதி வரை இலங்கையில் நடக்கிறது. இந்த போட்டிக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீகாந்த் தலைமையிலான தெரிவுக்குழுவினர் மும்பையில் கூடி வீரர்களை தெரிவு செய்தனர். புற்றுநோயில் இருந்து குணமடைந்த அதிரடி வீரர் யுவராஜ் சிங் 15 வீரர்கள் கொண்ட அணியில் இடம் பிடித்துள்ளார்.

நீண்டகாலமாக அணியில் இடம்பெறாத தமிழக வீரர் பாலாஜி, ஹர்பஜன்சிங் ஆகியோரும், டி20 உலகக் கிண்ணத்துக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி விபரம்:

மஹேந்திர சிங் டோனி (அணித்தலைவர்), வீரேந்திர சேவாக், ரவிச்சந்திரன் அஷ்வின், யுவராஜ் சிங், வீராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, கவுதம் கம்பீர், ரோகித் ஷர்மா, ஹர்பஜன் சிங், இர்பான் பதான், பாலாஜி, ஜாகீர் கான், அசோக் திண்டா, மனோஜ் திவாரி மற்றும் பியுஷ் சாவ்லா.

இதேபோல நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியும் இன்று தெரிவு செய்யப்பட்டது.

அவுஸ்திரேலிய தொடரில் மோசமாக ஆடியதால் மூத்த வீரர் வி.வி.எஸ்.லட்சுமண், நியூசிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லட்சுமண் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றுள்ளதால் அவர் இடத்தில் புஜாராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல சுரேஷ் ரெய்னா, ரகானே, இஷாந்த் ஷர்மா, ஆகியோரும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய தொடரில் அணியில் இடம்பெற்றும், போட்டிகளில் களமிறக்கப்படாத ரோகித் ஷர்மாவுக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை.

நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி விபரம்

மஹேந்திர சிங் டோனி (அணித்தலைவர்), வீரேந்திர சேவாக், ரவிச்சந்திரன் அஷ்வின், வீராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, கவுதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், சத்தீஸ்வர் புஜாரா, வி.வி.எஸ் லட்சுமண், அஜின்கியா ரகானே, இஷாந்த் ஷர்மா, ஜாகீர் கான், உமேஷ் யாதவ், ஜாகீர் கான், மற்றும் பிரக்யான் ஓஜா.

இந்த மாதம் இந்தியா வரும் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 23ம் திகதி தொடங்குகிறது.

டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்துடன் இரண்டு டி20 போட்டியில் (செப்டம்பர் 8 மற்றும் 11ம் திகதி) விளையாடுகிறது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ? பொலிசார் திடுக்கிடும் தகவல்
சூதாட்டம் இறப்பிற்கு சமமானது: டிராவிட்
சூதாட்டத்தில் சென்னை அணி வீரர்களுக்கு தொடர்பா?
பாடல் மூலம் மௌனத்தை கலைத்தார் சாக்ஷி டோனி
ஸ்பாட் பிக்சிங்: பொலிசாரிடையே மோதல்
பொலிசாரே ஸ்ரீசாந்த்தின் பெயரை கெடுக்கின்றனர்: வக்கீல் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னையுடன் மோதப் போவது யார்? மும்பை- ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல்.தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகப் பதில்..!
ஐ.பி.எல். சூதாட்டத் தொடர்பில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் நடுவர் நீக்கம்
பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனிடம் பொலிஸ் விசாரணை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:30.50 மு.ப ]
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. [மேலும்]
ஐ.பி.எல் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் தோழியான நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 08:39.42 மு.ப ] []
ஸ்ரீசாந்த் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கியமைக்கு, ஸ்ரீசாந்த் தோழியும் பாலிவுட் நடிகையுமான சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி வெளியிட்டு இருக்கிறார். [மேலும்]
சென்னை சொதப்பிய போட்டியில் சூதாட்டமா?
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:57.07 மு.ப ] []
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது. [மேலும்]
சொந்தமாக சூதாட்ட கம்பெனி தொடங்கிய ஸ்ரீசாந்த்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:48.15 மு.ப ] []
ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிக்சிங் செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருடன் ரஞ்சி கிண்ண வீரர்கள், பல்வேறு புக்கிகள் டெல்லி பொலிசிடம் பிடிபட்டனர். [மேலும்]
ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர்
[ புதன்கிழமை, 22 மே 2013, 12:24.42 பி.ப ]
மொகாலியில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற ஐ.பி.எல் பந்தயத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட தரகர்களுக்காக ஒரு ஓவர் பந்து வீசினார். [மேலும்]