துடுப்பாட்ட செய்தி
இலங்கை டி20 உலகக் கிண்ண போட்டிக்கு மிரட்டல் இல்லை: உபிஹா நீல்
[ சனிக்கிழமை, 09 யூன் 2012, 01:47.29 பி.ப GMT ]
இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண தொடருக்கு பாதுகாப்பு குறைப்பாடு எதுவும் இல்லை என்று தொடருக்கான பொறுப்பாளர் உபிஹா நீல் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் திகதி முதல் ஒக்ரோபர் 7ம் திகதி வரை இலங்கையில் டி20 உலகக் கிண்ண தொடர் நடைபெற உள்ளது.

இதில் இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, தென் ஆப்ரிக்கா உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இலங்கையில் உள்ள கண்டி, கொழும்பு, ஹம்பன்டோகா ஆகிய 3 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண தொடர் தொடர்பான முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனதாக தகவல் வெளியானது.

இந்த ஆவணங்களை பாதுகாப்பு ஆலோசகர் ஷான் டுல்வா என்பவர் திருடியதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. அதன்பின்பு ஷான் டுல்வா தொடரின் பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஷான் டுல்வா, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆனால் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள உபிஹா நீல், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இது குறித்து உபிஹா கூறுகையில், இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண தொடருக்கு எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை. தொடர் நடத்துவதற்கு எதிராக மிரட்டல் எதுவும் வரவில்லை.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றதைப் போல இந்த ஆண்டு இலங்கை அரசும் தகுந்த ஏற்பாடு செய்துள்ளது என்றும் டி20 தொடருக்கான ஆவணங்கள் எதுவும் தொலையவில்லை எனவும் தெரிவித்தார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்வது யார்? இன்றைய இறுதிப்போட்டியில் சென்னை- மும்பை அணிகள் மோதல்
இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ்: இந்திய வீராங்கனை தீபிகா தோல்வி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் டிராவிட்
டிராவிட்டை ஆட்டமிழக்க செய்த சூதாட்ட நடுவர்
ஸ்ரீசாந்த் வீட்டில் நுழைய முயன்ற போலி “பொலிஸ்”
கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டமயமாக்க வேண்டும்: பாய்காட் வலியுறுத்தல்
ஐ.பி.எல் சூதாட்டத்தில் பஞ்சாப் வீரர்கள் 8 பேர் சிக்குகிறார்கள்
கோஹ்லி, ஹர்பஜன் எனக்கு நெருக்கமானவர்கள்: விண்டூ சிங்
ஸ்ரீசாந்த் மற்றொரு தோழிக்கும் ஒரு செல்போன் பரிசு: பொலிசார் பறிமுதல்
தங்கநகை, பரிசுகள் வேண்டாம் என்று தப்பியோடிய பாகிஸ்தான் நடுவர்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறுதி சுற்றுக்குள் நுழைந்தது மும்பை அணி: 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ராஜஸ்தான்(வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:54.44 பி.ப ] []
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-2 சுற்றில் மும்பை இண்டியன்ஸ் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ? பொலிசார் திடுக்கிடும் தகவல்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:34.19 மு.ப ]
ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங் மொடல் அழகிகளை தரகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. [மேலும்]
சூதாட்டத்தில் சென்னை அணி வீரர்களுக்கு தொடர்பா?
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:59.29 மு.ப ]
ஐபிஎல் சூதாட்டத்தில் சென்னை அணியை சேர்ந்த மூன்று வீரர்களுக்கும் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மும்பை பொலிசார் அறிவித்துள்ளனர். [மேலும்]
பாடல் மூலம் மௌனத்தை கலைத்தார் சாக்ஷி டோனி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:20.54 மு.ப ]
சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங் அருகில் டோனியின் மனைவி இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன. [மேலும்]
ஸ்பாட் பிக்சிங்: பொலிசாரிடையே மோதல்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:08.13 மு.ப ]
ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக மும்பை மற்றும் டெல்லி பொலிசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. [மேலும்]