துடுப்பாட்ட செய்தி
டெஸ்ட் தொடர்: இரட்டை சதத்தை தவற விட்ட மொகமது ஹபிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூலை 2012, 04:52.26 மு.ப GMT ]
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் மொகமது ஹபிஸ் இரட்டை சதத்தை தவற விட்டார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

இதனையடுத்து 2வது டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள சின்ஹல்சே விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று தொடங்கியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் மூலம் முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி இந்த டெஸ்ட்டில் வெற்றி கொள்ளும் முனைப்போடு துடுப்பெடுத்தாட தொடங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய தவ்பீக் 65 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிரசன்ன ஜெயவர்த்தன பிடியில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான மொகமது ஹபிஸுடன், அசார் அலி இணை சேர்ந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினர்.

பாகிஸ்தான் அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவருக்கு 1 விக்கெட் இழப்பிற்கு 334 ஓட்டங்கள் எடுத்தது.

தொடக்க வீரரான மொகமது ஹபிஸ் 18 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் கடந்து 172 ஓட்டங்களும், அசார் அலி 6 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்து 92 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தொடங்கியது.

இரட்டை சதத்தை நோக்கி விளையாடிய மொகமது ஹபிஸ் 196 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரங்கன ஹேரத்தின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

சதத்தை கடந்து 157 ஓட்டங்கள் எடுத்த அசார் அலி குலசேகராவின் பிடியில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய யூனிஸ் கான் 32 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மழையால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 29 ஓட்டங்களும், ஆசாத் ஷாபிக் 1 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுமித் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தியது தான் திருப்புமுனை: பிளமிங்
ஸ்பாட்பிக்சிங்கில் சென்னை அணிக்கு தொடர்பு?
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் பணிநீக்கம்
சாதிக்க வேண்டிய கட்டயாத்தில் ராஜஸ்தான்? பிளேஆப் சுற்றில் ஐதராபாத்துடன் இன்று மோதல்
பெல்ஜியம் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய சானியா மிர்சா
ஹஸ்சி, ரெய்னாவின் அதிரடியால் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது சென்னை: 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது மும்பை (வீடியோ இணைப்பு)
ஐ.பி.எல். தொடரிலிருந்து புனே அணி திடீர் விலகல்
ஐபிஎல் சூதாட்டம்: பிரபல நடிகர் தாரா சிங்கின் மகன் கைது
இந்தியாவுடன் மோதுனாலே ஸ்பெஷல் தான்: முகமது ஹபீஸ்
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? பரபரப்பான தகவல்கள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:09.04 மு.ப ]
சகோதரர் தயாரிக்கும் படத்தில் ஸ்ரீசாந்த் நாயகனாக நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:22.03 பி.ப ]
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி கைதான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. [மேலும்]
ட்விட்டரில் வம்பிழுத்து பிரச்சினையில் சிக்கிய வார்னர்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:40.35 மு.ப ]
ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடும் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ட்விட்டரில் 2 செய்தியாளர்களை திட்டி எழுதியதால் கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. [மேலும்]
ஸ்பாட்ஃபிக்ஸிங்கால் மனஉளைச்சலுக்கு ஆளான டிராவிட்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:23.16 மு.ப ]
ஸ்பாட்ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தனது அணி வீரர்கள் மூவர் கைதாகியுள்ளமை தொடர்பில் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாக ஐ.பி.எல் ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். [மேலும்]
விஸ்வரூபம் எடுக்கும் சூதாட்ட விவகாரம்: உள்ளூர் வீரர்கள் ஏஜெண்டாக செயல்பட்டது அம்பலம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:42.30 மு.ப ]
கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதாகியுள்ள தரகர்களுக்கு எராளமான உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஏஜென்ட்களாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. [மேலும்]