ஒலிம்பிக்ஸ் செய்தி
விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிக்கு 22 நாட்கள் மட்டுமே
[ வியாழக்கிழமை, 05 யூலை 2012, 02:39.35 மு.ப GMT ]
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி, இந்த முறை லண்டனில் ஜூலை 27ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 12ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

நவீன ஒலிம்பிக்கின் 30வது போட்டி இது. நவீன ஒலிம்பிக் போட்டி மூன்றாவது முறையாக லண்டனில் நடைபெறுகிறது.

இதன்மூலம் நவீன ஒலிம்பிக்கை மூன்று முறை நடத்திய முதல் நகரம் என்ற பெருமை லண்டன் வசமாகியுள்ளது. இதற்கு முன்னர் 1908, 1948-ம் ஆண்டுகளில் லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுள்ளது.

கி.மு. 776-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வந்தாலும், 1896-ம் ஆண்டுதான் நவீன ஒலிம்பிக்காக உருவெடுத்தது.

ஒரு தலைமுறைக்கே உத்வேகம் கொடு(INSPIRE A GENERATION) என்பதுதான் லண்டன் ஒலிம்பிக்கின் போட்டியின் வாசகம். 204 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். 26 வகையான விளையாட்டுகளில் 302 போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருதை அள்ளி வந்த ஸ்லம்டாக் மில்லினர் பட இயக்குநர் டேனி பாயல் தலைமையிலான குழுவினர்தான் தொடக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகளை அரங்கேற்றவுள்ளனர். இதேபோல் இந்தியாவின் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசைப் பிரபலங்களும் ஒலிம்பிக்கை அதிரவைக்கவுள்ளனர்.

அதிரடி இசை உள்ளிட்ட பல்வேறு பிரமாண்டங்களுடன் தொடங்கும் இந்த ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவை உலகம் முழுவதிலும் இருந்து 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் டி.வி. மற்றும் இணையத்தளங்கள் மூலம் கண்டுகளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க விழாவுக்கான டிக்கெட்டின் விலை ரூ.1.7 லட்சம். மாரத்தான், டிரையத்லான், ரோடு சைக்கிளிங் ஆகிய போட்டிகளுக்கு அனுமதி இலவசம் என்றபோதிலும், ஒலிம்பிக்கில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ள படகுப் போட்டிக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இராணுவ வீரர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 2005-ல் 2012-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட அடுத்த நாளில் லண்டனில் நிகழ்ந்த ரயில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

பல்வேறு பயங்கரவாத கும்பல்களிடம் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்புக்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மைதானத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் ஏவுகணைகள் நிறுத்தப்படுவதோடு, வான்வழி மற்றும் நீர்வழி பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேம்ஸ் நதியில் பாதுகாப்பு கப்பல்கள் நிறுத்தப்படுகின்றன. இதுமட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான பொலிசாரும், வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். கழிப்பறைகளைத் தவிர மற்ற இடங்களில் முழுவதுமாக கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படுகிறது.

ஒலிம்பிக் மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டிகளுக்காக தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 4,700 பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ராயல் மின்ட் என்ற நிறுவனம் பதக்கங்களை தயாரித்துள்ளது.

இதை டேவிட் வாட்கின்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார். பதக்கங்களின் எடை 375 கிராம் முதல் 400 கிராம் ஆகும். இது 7 மி.மீ. தடிமனுடையது.

பதக்கத்தின் முன்புறம் கிரேக்கத்தின் வெற்றிக்கடவுளான நைக்கின் உருவமும், பின்புறத்தில் ஒலிம்பிக் போட்டியின் இலச்சினை, தேம்ஸ் நதி மற்றும் வீரர்களின் ஆற்றலைக் குறிக்கும் வகையிலான தொடர் கோடுகளும் காணப்படும்.

ஒலிம்பிக் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் போன்ற ஒரு கோபுரத்தை போட்டி நடைபெறவுள்ள மைதானத்திற்கு அருகிலேயே அமைத்திருக்கிறார்கள்.

376 அடி உயரத்தில் சுருள் வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் இக்கோபுரத்திற்கு ஒலிம்பிக் கோபுரம் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

455 சுருள் வடிவ படிக்கட்டுகள் இதில் காணப்படுகின்றன. இங்கு ஹோட்டல் வசதியும் உள்ளது. இங்கிருந்து 24 மைல் தொலைவுக்கு லண்டன் நகரின் அழகை ரசிக்க முடியும்.

இந்தக் கோபுரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள சுதந்திர தேவியின் சிலையைவிட 22 அடி உயரம் அதிகமாகும். இந்தக் கோபுரத்தை வடிவமைத்திருப்பது வேறு யாருமல்ல, இந்திய ஓவியர் அனீஸ் கபூர்தான்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு
பிராட் பந்துவீச்சில் 170 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி
ட்விட்டரில் வம்பிழுத்து பிரச்சினையில் சிக்கிய வார்னர்
ஸ்பாட்ஃபிக்ஸிங்கால் மனஉளைச்சலுக்கு ஆளான டிராவிட்
22வது முறையாக லா லிகா சாம்பியன் பட்டம் வென்றது பார்சிலோனா
விஸ்வரூபம் எடுக்கும் சூதாட்ட விவகாரம்: உள்ளூர் வீரர்கள் ஏஜெண்டாக செயல்பட்டது அம்பலம்
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்று ஓய்வு நாள்
ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)
ஐதராபாத் ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடுகிறது கொல்கத்தா
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:37.02 மு.ப ] []
சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் தங்கிய மும்பை ஓட்டல் அறையில் இருந்து லேப்-டாப், ஐ-பேடு, டைரி உட்பட ஏராளமான பொருட்களை பொலிசார் பறிமுதல் செய்தனர். [மேலும்]
ஐதராபாத் அணியை தோற்கடிக்குமாறு கம்பீரிடம் கேட்பேன்: கோஹ்லி
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:08.44 மு.ப ]
பெங்களூரில் நடைபெற்ற சென்னை அணிக்கெதிரான போட்டியில் பெங்களூர் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [மேலும்]
கோஹ்லி அதிரடியால் பெங்களூர் அபார வெற்றி: 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது சென்னை(வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:36.29 பி.ப ] []
ஐ.பி.எல் தொடரின் 70வது லீக் போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
ஸ்ரீசாந்துக்கு ஆதரவு கொடுத்த டிராவிட்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:07.42 பி.ப ] []
சூதாட்ட புகாரில் கைதான ஸ்ரீசாந்துக்கு ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் டிராவிட் எப்போதும் ஆதரவாக இருந்து வந்துள்ளார் என்று மேற்கு வங்க வீரர் ரானாதேவ் போஸ் கூறியுள்ளார். [மேலும்]
படுக்கையறை காட்சிகளால் மிரட்டப்பட்டாரா ஸ்ரீசாந்த்?
[ சனிக்கிழமை, 18 மே 2013, 11:42.53 மு.ப ]
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பாட்பிக்சிங்' முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்களான ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்]